Breaking
Sat. Nov 2nd, 2024

இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை கடந்த அர­சாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்­பு­றவை புதுப்­பித்­துக்­கொள்ள எடுக்கும் நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தற்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எமது எதிர்­கால பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தா­கு­மென்றும் தெரி­வித்தார்.

தமிழக அரசாங்கத்துடனும் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்­பாக அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில்,

அயல் நாடான இந்­தி­யா­வுடன் நெருங்­கிய நட்­பு­றவை பேணு­வது என்­பது எமது வெளி­நாட்டுக் கொள்­கையின் முக்­கி­யத்­து­வ­மா­ன­தாகும்.ஆனால் கடந்த அர­சாங்கம் இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை முறித்­துக்­கொண்­டது.

இலங்கை பின்­பற்­றிய அணி சேரா கொள்­கையை கைவிட்டு பிழை­யான வெளி­நாட்டுக் கொள்­கையை கையாண்­டது.இதனால் உலகில் தனித்து விடப்­பட்ட ராஜ்­ஜி­ய­மா­கவும் அர­சியல் கலா­சாரம் மழுங்­க­டிக்­கப்­பட்ட நாடா­கவும் எமது நாடு மாறி­யது.

புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு இந்­தி­யா­வுடன் நட்­பு­றவை மேம்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.அதன் முதற்­கட்­ட­மாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்­தி­யா­வுக்கு விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ளார். இது வர­வேற்­புக்­கு­ரி­ய­தாகும்.

இதன் மூலம் எமது பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்திக் கொள்ள முடியும்.தெற்­கா­சி­யாவின் அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்கும் இரு தரப்பு நல்லுறவு அத்தியாவசியமானதாகும்.அதேவேளை தமிழ் நாட்டு மாநில அரசுடனும் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Related Post