Breaking
Sat. Nov 2nd, 2024

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முன்­னி­லைப்­ப­டுத்தி வெற்றி பெறு­வ­தற்கு சிலர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை. அம் முயற்­சியை தகர்த்து தவி­டு­பொ­டி­யாக்­குவோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

பஷில், கோத்த­பாய என ராஜ­ப­க்ஷ­வினர் தொடர்­பாக மக்கள் மத்­தியில் காணப்­பட்ட வீரர்கள் என்ற மாயைக்கு மக்கள் தேர்­தலில் பாடம் புகட்டி அவர்­களை சிறிய மனி­தர்­க­ளாக்­கி­யுள்­ளனர் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக மின்­சக்தி மற்றும் எரி­சக்தி தொடர்­பான அமைச்சர் சம்­பிக ரண­வக்க மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,வடக்கின் ஆளு­ன­ராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் வாக்­க­ளிப்­பதை தடுக்க முனைந்தார்.

அரச அதி­கா­ரி­யான அவர் தனது கட­மை­களை மறந்து அர­சி­யலில் ஈடு­பட்டார். இது கவ­லைக்­கு­ரிய விடயம். எனவே பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டமை நியா­ய­மா­ன­தாகும்.கோத்த­பாய, பஷில் மற்றும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் வீர­மிக்­க­வர்கள் என்ற மாயை நாட்டு மக்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டி­ருந்­தது. அவை­ய­னைத்­தையும் கடந்த தேர்­தலில் மக்கள் தகர்த்து தவிடு பொடி­யாக்கி விட்­டனர்.

மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்­பாக ஒரு விட­யத்தை கூற வேண்டும்.பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சில அதி­கா­ரி­களை அலரிமாளிகையை பார்­வை­யி­டு­வ­தற்­காக அனுப்பி வைத்­துள்ளார்.அதன் போது அங்கு கைவி­டப்­பட்ட நாயொன்று ஒரு அறைக்குள் இருந்து குரைத்துக் கொண்டு வெளியே வந்­துள்­ளது.பின்னர் அந்­நாய்க்கு உணவு வழங்கி கூடொன்றில் அடைத்து வைத்­துள்­ளனர்.

இதேபோன்று தான் மஹிந்த அடுத்த தேர்­தலில் போட்­டி­யி­டுவார். வெற்றி பெறுவார். பிர­த­ம­ராவார் எனக் கூறு­ப­வர்­களும் மேற்­கண்ட கைவி­டப்­பட்ட நாய்­களைப் போன்­ற­வர்­களே ஆவார்கள்.இந்த முயற்­சிகள் ஒரு போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை.

நான் சவால் விடு­கிறேன். முடிந்தால் தேர்­தலில் போட்­டி­யிட்டு ஒரு ஆச­னத்­தை­யா­வது வெற்றி பெற்றுக் காட்­டட்டும்.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சுதந்­திரக் கட்சி பொதுத்­தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் தலை­தூக்­காது.

எமக்­கி­டையே உடன்­பாடு உள்­ளது. பெரும்­பான்மை எம்.பி. க்களை கொண்­ட­வ­ருக்கு பிர­தமர் பதவி வழங்­கப்­படும் என்­ப­தாகும்.அதிக எண்­ணிக்கை ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இருக்­கு­மானால் அவ­ருக்கு பிர­தமர் பதவி கிடைக்கும்.

தற்­போ­தைய இடைக்­கால அரசில் அவர் பிர­த­ம­ராக பதவி வகிக்­கின்றார்.பொதுத்­தேர்­தலில் அதிக எம்.பி.க்களை பெறு­ப­வ­ருக்கு பிர­தமர் பத­வியும் அதற்கு அடுத்த படி­யா­க­வுள்­ள­வ­ருக்கு பிர­திப்­பி­ர­த­மரும் வழங்­கப்­படும்.

பிரி­வினை வாதத்தை பிர­சாரம் செய்து மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு ராஜ­ப­க் ஷவும் அவ­ரது சகோ­த­ரர்­களும் மேற்­கொள்ளும் முயற்­சிகள் எதுவும் வெற்றி பெறப் போவ­தில்லை.தேசிய பாது­காப்­பிற்கு முத­லிடம் வழங்­கப்­படும். பிரி­வினை வாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.மக்களின் சுதந்திரத்தை மதிக்கின்றோம்.

ஆனால் அதற்குள் மறைந்து கொண்டு அடிப்படை வாதம் பிரிவினை வாதத்தை விதைப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

-Verakesari-

Related Post