Breaking
Sat. Nov 2nd, 2024

முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­களை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மூலம் வெளிப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­கின்­றது. முன்­னைய ஆட்­சியில் முக்­கிய பிர­மு­கர்கள் பலரின் ஊழல்கள் தொடர்­பி­லான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரிவித்தார்

முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவிற்கும் எதி­ரான பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி. யின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­யு­மென வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

கடந்த பத்து ஆண்­டு­களில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அர­சாங்­கத்தில் மக்­களின் சொத்­துக்கள் நாட்டின் வளங்கள் எவ்­வாறு சூறை­யா­டப்­பட்­டன என்­பது தொடர்பில் தற்­போது அறியக்கிடைக்கின்றது. கோடிக்­க­ணக்­கான சொத்­துக்­களை ஒரு குடும்பம் மட்டும் சூறை­யாடி அனு­ப­வித்து வந்­துள்­ளது. இலங்­கைக்குள் பல ஏக்கர் நிலப்­ப­ரப்பில் ஆடம்­பர வீடு­களும் சொகுசு ஹோட்­டல்­களும் அமைத்து சுக­போக வாழ்க்­கை­யினை இவர்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். அர­சாங்­கத்­திற்குள் இருந்தும் அமைச்­சர்கள் தற்­போது ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நடந்த உண்­மை­களை வெளிச்­சத்­திற்கு கொண்டு வரு­கின்­றனர்.

இலங்­கையின் பிர­பல ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கொலை தொடர்­பிலும் கடத்­தல்கள் தொடர்­பிலும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ நேர­டி­யான தொடர்­பினை கொண்­டுள்ளார் என்ற குற்­றச்­சாட்­டா­னது மிகவும் பார­தூ­ர­மா­னது. நாட்டின் ஜன­நா­ய­கத்­திற்­காக போராடும் ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொலை செய்ய அர­சாங்கம் திட்டம் தீட்­டி­யி­ருக்குமாயின் அதுவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சியின் அரா­ஜ­கத்­தினை வெளிச்­சத்­திற்கு கொண்டு வரும் செயற்­பா­டாகும்.

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குடும்­பத்தின் முக்­கிய உறுப்­பி­னர்கள் சில­ருக்கு எதி­ராக ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டினை நாம் முன்­வைத்­தி­ருந்தோம். அவை தொடர்­பான ஆதா­ரங்கள் அனைத்தும் எம்­மிடம் உள்­ளன. அதேபோல் மேலும் பல குற்­றங்கள் தொடர்பில் சகல ஆதா­ரங்­களும் எம்­மிடம் உள்­ளன. அவை தொடர்பில் முறைப்­பா­டுகள் முன்­வைக்­க­வுள்ளோம். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக் ஷ மற்றும் அஜித் நிவாட் கப்ரால் போன்­றோர்­களின் ஊழல் தொடர்பில் முறை­யிட்­டுள்ளோம். நாளை (இன்று) விடு­த­லைப்­பு­லி­களின் பிர­தான தலை­வர்­களில் ஒரு­வ­ரான (கே.பி) குமரன் பத்­ம­நா­த­னுக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் முறைப்­பாட்­டினை செய்­ய­வுள்ளோம். இந்த பட்­டியல் மிக நீள­மா­னது.

அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன் பழைய விட­யங்­களை மறைத்து மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்கை இத்­தோடு முடி­வுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் விடு­தலை முன்­னணி தனது வேட்­டை­யினை ஆரம்­பித்து விட்­டது. நூறு நாட்களில் தேசிய அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என்பது எமக்கு தெரியாது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி தனது கடமையினை செய்யும். மக்களின் சொத்துக்களையும் நாட்டின் சொத்துக்களையும் தனி நபர்கள் சூறையாடுவதை நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

-Verakesari-

Related Post