கடந்த 5 வருடங்களாக சீர்குலைந்திருந்த இலங்கையின் சட்டத்தை மீண்டும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆசிய நாடுகளின்;, சட்டமா அதிபர்களின் மாநாட்டை இன்று, ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.எமது நீதித்துறை 200 வருடங்களுக்கு மேல்ப்பட்டது.
உயர் நீதிமன்ற முறைமை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து, எமது நீதித்துறை குறித்த நாம் பெருமைப்படலாம் ஆனால், துரதிஸ்ட வசமாக கடந்த 5 வருட காலப்பகுதியினுள் அதன் அடித்தளத்திற்கு சவால் மற்றும் முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நீதித்துறை பக்கசார்பான தன்மையை கொண்டிருந்தது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். சட்ட வல்லுனர்கள் சட்டத்தை பாதுகாக்க சிறந்தமுறையின் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
இதன்மூலம், சட்டம் வீணாக நசுக்கப்படாமல் ஓரளவிற்கு காப்பாற்றப்பட்டுள்ளது.தற்போது ஜனாதிபதியும், அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்துவதறகு உறுதியாக உள்ளனர்.