Breaking
Sun. Nov 24th, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

கடந்த பல வருடங்களுக்கு அப்பால் எமது நாட்டில் எற்பட்டுள்ள இன உறவை சீர் குலைக்கும் வகையில் ஒரு சிலர் செயற்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் எமது தமிழ் பேசும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மன்னார்.வவுனியா.முல்லைத்தீவு மாவட்ட நகர பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ்.செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்.எம்.ஹஸன்.மன்னார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஞானராஜ் சோசை.எம்.சஹாப்தீன்.முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர்.எஸ்.எம்.பைரூஸ்.உறுப்பினர்களான மௌலவி அப்துர் ரஹ-மான்.எம்.சுபியான்.மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன்.மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஹஜ்ஜிக்.நவ்பீல்.எம்.சனுஸ்.றியாப் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன்.மற்றும் தீபன் ஆகியோரே இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

தற்போது எமது நாட்டில் நல்லாட்சியொன்றினை எற்படுத்தும் வகையில் கடசி பேதங்களை மறந்து அனைத்து இனத்தவர்களும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்த செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் சில அரசியல் பிற்போக்கு கொண்ட சக்திகள் மீண்டும் குறிப்பாக வடக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் நல்லுறவில் விரிசல்களை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பமான தகவல்களை மக்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றது தொடர்பில மிகவும் அவதானத்துடன் இருந்துவருவதாக தெரிவித்துள்ள மக்கள் பிரதி நிதிகள்.இவற்றுக்கு பதிலளிப்பது தமது கடமையென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சில இணையத்தளங்கள் இவர்கள் தொடர்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எம்மில் எழுந்துள்ளதாகவும் இம்மக்கள் பிரதி நிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னரான காலத்தில் வடக்கில் வாழும் அனைத்து மக்களது வாழ்வு மேம்பாடு தொடர்பில் வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் அதிகப்படியான வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் இம்மக்களுக்கு இன்றும் அளப்பறிய பணியினை ஆற்றிவருகின்றார்.இதனை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் மீண்டும் மக்களுக்கு மத்தியில் சென்று அவர்களை இன ரீதியான பிளவுகளுக்கு வித்திடுகின்ற பணியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.இதனால் தான் நாம் இந்த அறிக்கையினை வெளியிட நேரிட்டதாகவும் இம்மக்கள் பிரதி நிதிகள் தெரிவித்துள்ளனர்.

சில அரசியல்வாதிகள் தாங்கள் வந்த பாதையினை மறந்து தமது வார்த்தைகளுக்கு வருகின்ற முறையற்ற வார்த்தைகளை பாவிப்பது ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியினை எற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள இவர்கள் நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை தேசிய தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆற்றிய பங்களிப்பினை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் தமது இயலாத்தன்மையினை மறைத்துக் கொள்ளும் வகையில் தாங்கள் மட்டுமே வடக்கிலும்.

அதற்கு வெளியிலும் தமிழ் பேசும் மக்களது அனைத்து வாக்குகளையும் பெற்றுக் கொடுத்த்தாக தம்பட்டம் அடிப்பதிலிருந்து அரசியல் வங்குரோத்து நிலையினை கானமுடிவதாக வன்னி மாவட்ட மக்கள் பிரதி நிதிகள் மேலும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Post