Breaking
Sat. Nov 2nd, 2024

அஸ்ரப் ஏ சமத்

ஊடக அமைச்சின் செயலாளர் கருனாதிலக்க பரணவிதாரண –

இந்த நாட்டில் வாழும் ஒரு சாதாரண பிரஜை ஒர் அரச நிறுவனத்திற்குச் சென்றோ அல்லது அரசாங்கத்தின் செயற்பாட்டை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் அடுத்த 2 வாரங்களுக்குள் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அனுமதி பெறப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என ஊடக அமைச்சின் புதிய செயலாளர் கருணாதிலக்க பரணவிதாரண தெரிவித்தார்.

மேற்கண்டவாறு கொழும்பு உதைபந்தாட்டச் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நல்லாட்சியும் இலஞ்ச ஆட்சியை ஒழிப்போம் என்ற தலைப்பில் நேற்று (19)ஆம் திகதி நடைபெற்ற கருத்தரங்கின்போது உரையாற்றும்போதே ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இக் கருத்தரங்கு கொழும்பில் முதற்தடவையாக நடைபெற்றது. இக் கருத்தரங்கு நாடளாரீதியில் கிராம மக்களுக்கும் நல்லாட்சி பற்றி தெளிவுகளை அறிமுகப்படுத்தப்படும். இந் நிகழ்வு பல்கழைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் சிறியானி பேரேரா தலைமையில் நடைபெற்றது. இலங்கை ருபாவாகிணிக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் சோமரத்தின் திசாநாயக்க, சீனிமா தயாரிப்பாளர் தர்மாதாசா பண்டார ஆகியோறும் உரையாற்றினார்கள். இந் நிகழ்வில் கலைஞர்கள் மற்றும் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டணர்.

கருனாதிலக்க பரணவிதாரண மேலும் அங்கு உரையாற்றுகையில் –
தகவல்களை அறியும் சட்டம் இந்தியா மற்றும் மேலைத்தேய நாடுகளில் சிறந்து விளங்குகின்றன.
இந்த நாட்டில் மக்களிடையே கலைகட்டியுள்ள அரசியல் கலாச்சாரத்தை நாம் மாற்ற வேண்டும். ஒரு தொழிலை பெறுவதற்கோ, அல்லது தனது பிள்ளையை பாடசாலை அனுமதிப்பதற்கோ ஒரு அமைச்சரின் அமைச்சில் உள்ள ஒரு ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள அரசியல்வாதிகளின் பின்னால் சென்றால் அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்ற மனப்பாங்கை இலங்கையில்

பெரும்பாண்மையினர் கொண்டிருக்கின்றனர். அரசியல் இல்லாமல் தமது கருமத்தை சாதாரண ஒருதர் தமக்கு இருக்கின்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முறை இந்த நாட்டில் இருக்க வேண்டும். இந்த கலாச்சாரத்தை நாம் மாற்ற வேண்டும் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதியின் மைத்திரிபாவின் வேலைத்திட்டத்தில் இதுவும் ஒரு அங்கமாக உள்ளது.

மைத்திரிபால ஆட்சிக்கு வருவதற்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் பெரும்பாண்மையாக உள்ளதா? ஏனச் சிந்திக்காமல் உடன் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்ற பின் இயற்கையாகவே அவருக்கு தேசிய அரசாங்கம் கிடைத்துள்ளது. என பரணவிதாரண உரையாற்றினார்.

Related Post