Breaking
Sat. Nov 2nd, 2024

உலகத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்க சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உயர் நீதிமன்றம் டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டது.

ஆனால் ஐரோப்பிய யூனியன் இதற்குச் சம்மதிக்காது ஹமாஸ் போராளிகளைத் தொடர்ந்து தீவிரவாதப் பட்டியலில் நீட்டிக்குமாறு சமீபத்தில் மனு தொடுத்ததை அடுத்து ஐரோப்பிய யூனியனை திங்கட்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது ஹமாஸ் அமைப்பு.

காஸாவில் இருந்து ஹமாஸ் இன் பேச்சாளர் சமி அபு ஷுஹ்ரி பத்திரிகைகளுக்கான மின்னஞ்சல் வழியிலான அறிவிப்பில், இவ்விவகாரம் தொடர்பாகத் தகவல் அளித்தார். இதில், தம்மைத் தீவிரவாதப் பட்டியலில் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்துவதன் மூலம் அது எந்தளவுக்கு இஸ்ரேலுக்குப் பக்கச் சார்பாக உத்தியோக பூர்வமாக நடந்து கொள்கின்றது என்பது புலப்படுகின்றது என்றுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் தனது உயர் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்புக்கு எதிராகப் போட்டியிடுவது என்பது ஜனநாயகத்தைப் புறக்கணிப்பதற்கும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேலும் மேலும் வன்முறைகளை அரங்கேற்றுவதற்கான பச்சை நிற சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்கும் சமன் எனவும் அபு ஷுஹ்ரி மேலும் தெரிவித்தார்.

இதைவிட, யூதர்களின் அழுத்தத்துக்கு அடிபணியாது நீதியின் குரலுக்கு ஐரோப்பிய யூனியன் செவிமடுக்க முன் வர வேண்டும் எனவும் அபு ஷுஹ்ரி குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் திகதி ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உச்ச நீதிமன்றத்தில் உலகத் தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்கும் முடிவு எடுக்கப் பட்டது. இதை அடுத்து புருஸ்ஸெல்ஸில் ஒன்று கூடிய ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இத்தீர்வை எதிர்ப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டது.

இஸ்ரேலில் தாம் தொடுத்த பல தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்றதற்கு ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை இருக்கும் அதே நேரம் பதிலுக்கு இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டதற்கு இஸ்ரேலும் பொறுப்பேற்கும் நிலை உள்ளது என்பதாகவும் சில ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

Related Post