அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பல அதிதிகள் வருகை தந்தனர்.
இக்கூட்டத்தில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.