Breaking
Sun. Nov 24th, 2024

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய மறுப்பு தெரிவித்துள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் முடிவுகள் வந்து கொண்டிருக்கையில் இராணுவ நகர்வு ஒன்றுக்கு முயற்சிக்கப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரிமாளிகையை விட்டு வெளியேறி விட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இராணுவப் புரட்சி விடயத்தில் அலரிமாளிகையில் இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறப்படுவது அடிப்படையற்ற கருத்து என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

Related Post