இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வைபவமொன்றில் கலந்து கொள்ள வருகைத்தந்த அதிகாரியொருவரின் பிள்ளையொன்று மேல்மாடியொன்றிலிருந்து தவறி விழுந்ததையடுத்து அந்த பிள்ளை உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயங்குள்ளானவர் 5 வயது நிரம்பிய தரணிஸ் எனவும் இவர் நருவலிக்குளத்தை சேர்ந்தவர்.
இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் உடன் மன்னார் வைத்தியசாலைக்கு சென்று பிள்ளையினை பார்வையிட்டதுடன்.மேலதிக சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலைக்கு உடன் இடமாற்றம் செய்வது தொடர்பில் வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்..
அதே வேளை இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று கடந்த தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த வைபவங்கள் யாவும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாகவும் றிப்கான் பதயுதீன் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் இரு புனித தளங்களான மக்கா மற்றும் மதீனா என்பவற்றின் பாதுகாவலராக இருந்துவந்த அப்துல்லா பின் அப்துல அஸீஸ் அவர்களின் மறைவினையடுத்து இந்த இறுதி கிரியைகள் மற்றும் அந்த நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்களின் கவலையினை வெளிப்படுத்தும் வகையில் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் சவுதி அரேபியாவுக்கு திடீர் விஜயத்தை நேற்று மேற்கொண்டதால் இந்த நிகழ்வுகள் பிரிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.