சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கடந்த அரசாங்கத்தின் சில முக்கிய அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றவர்களை மீள அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
இவர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அழைத்து வர முடியாவிட்டால் சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் அழைத்து வரப்படுவர் என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.