Breaking
Fri. Nov 1st, 2024

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அரசியல் தலையீடுகள் கடந்த அரசில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கடந்த காலங்களில் கணித பாடத்தில் 35 புள்ளிகள் சித்தியடையும் மட்டத்தை சுமார் 18 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிகிறோம். இது தொடர்பாக விசாரணைகள் நடத்தவுள்ளோம்.

தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே கல்வி அமைச்சின் நோக்கம். மாணவர்களின் தரத்துக்கு கல்வியை கீழ் மட்டத்துக்கு கொண்டு வருவது எமது நோக்கமல்ல.

க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதாயின் கணித பாடம் கட்டாயமாக சித்தியடைதல் வேண்டும். உயர்தர பரீட்சைக்கு கணித பாடம் தேவையில்லை என கடந்த அரசு கொண்டு வந்த திட்டம் முற்றாக ஒழிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post