Breaking
Sat. Nov 23rd, 2024

-முஸ்லிம் மீடியா போரம் ஊடாக அமைச்சரிடம் கோரிக்கை-

பிரௌஸ் முகம்மட்

media forum requestகடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் நாடுதிரும்பி நாட்டுக்காக தமது பணிகளை தொடக்கூடிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய ஊடக அமைச்சராக பதவியேற்றுள்ள கயந்த கருணாதிலகவுக்கு முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளடதாவது;

புதிய அரசின் ஊடக அமைச்சராக நியமனம் பெற்றுள்ள உங்களுக்கு எமது சார்பில் வாழ்த்துச் செய்தியினை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஐ.தே.க. ஊடகப் பேச்சாளராகவும் நிழல் ஊடக அமைச்சராகவும் பணிபுரிந்து அனுபவம் பெற்ற நீங்கள் ஊடக அமைச்சின் பணிகளை முன்னெடுக்க உதவும் என நாம் நம்புகிறோம்.

நாட்டிற்குள் புதிய ஊடக கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நீங்கள் அளித்துள்ள வாக்குறுதி குறித்து எமது அமைப்பு சார்பாக பாராட்டு தெரிவிக்கின்றோம்.

கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக உயிர்ப்பாதுகாப்பு கருதி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வரும் ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் நாட்டுக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பு குறித்தும் தமது பாராட்டினைத் தெரிவிப்பதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post