அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றில் தற்போது மினி வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.