பட்ஜட்: மனந்திறந்து மக்கள் கருத்து
அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடுமுழு வதும் மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். சகல மக்களும் நன்மை பயக்கும் வரவு செலவுத் திட்ட மாக இது இருப்பதோடு, குடும்பத்தரிசிகளின் உள்ளத்தை பூரிப்படையச் செய்துள்ள தாக கருத்துக் கூறினர்.
இலங்கையின் வர லாற்றில் இதுபோன்ற திருப்திதரும் பட்ஜட் எதுவும் ஒரு போதும் சமர்ப்பிக்கப் படவில்லை என்று கூறியவர்கள், புதிய அரசு தங்களை உள்ளங்குளிர வைத்துள்ளதாகவும் அவர்கள் வெளிப் படுத்தினர்.
ஹட்டன், தியாகராஜா
கடந்த அரசாங்கம் ஒரு பொருளை குறைக்கும் அதேநேரம் நூறு பொருட்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு விலையை உயர்ந்தும் இதனால் வயிற்று பிழைப்பில் மிகவும் வறுமை உயர்ந்தது. இன்று 100 க்கும் 80% நன்மைகளை இந்த வரவு செலவுத் திட்டம் வழங்கியுள்ளது.
மக்கள் சேமிக்கவும் தங்களது தேவைகளை கூடுதலாக நிறைவேற்றவும் இங்கே வழியமைக்கப்பட்டுள்ளது.
யாரோ அனுபவிக்க நாங்கள் கொடுத்து தேய்ந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. இது அடுத்த தேர்தலுக்கு இலாபம் தேடும் வழியாக இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் நிலைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
ஜெயபாலசந்திரன், யாழ். அரச உத்தியோகத்தர்
இடைக்கால வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கின்றது. கடந்த கால அரசாங்கத்தினை விட தற்போதுள்ள புதிய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை செய்கின்றது. புதிய அரசினால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
யோ. கோகிலன், ஆசிரியர், புளியாவத்தை
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மறுபுறம் விலைக்குறைப்பு, பஸ் கட்டணம் குறைப்பு இவையெல்லாம் எமது சேமிப்பை அதிகரிப்பதோடு தொழிலையும் சந்தேஷத்துடன் செய்திட வழிவகுத்துள்ளது. மறுபுறம் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் பால் விலை 10/= வால் அதிகரித்துள்ளதால் மாதம் 2000/= வரையில் வருமானம் உயர்ந்துள்ளது.