பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்தியமைக்கும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இம் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல் சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு ஆகிய முக்கிய ஆலோசனைகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்படவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் பதவிக் காலத்தை 4 ஆண்டுகளாக குறைத்தல் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறல் ஜனாதிபதி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.