மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினின் மகள் குறித்த ரகசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகள்கள் எகடெரினா(28) மற்றும் மரியா(29) ஆகியோர் பொதுமக்கள் பார்வையில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன படித்துள்ளார்கள், தற்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் அலெக்சீ நவல்னி வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எகடெரினா பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
நேற்று புதினின் மகளை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பார்த்தேன். அவர் அறிவியல் கவுன்சிலில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
புதினின் மகள் 1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டக்குழுவுக்கு தலைவியாக உள்ளாராம். எகடெரினா மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவது அலெக்சி கூறி தான் தெரிய வந்துள்ளது. எகடெரினா கத்ரீனா விளாடிமிரோவ்னா டிகோனோவா என்ற பெயரில் பணியாற்றுகிறாராம்.
டிகோனோவா என்ற பெயரில் பணியாற்றுவது புதினின் மகள் தான் என்று மாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.