ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின் நலன்புரிக்காக செலவு செய்யுங்கள் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோக பூர்வ விமானம் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது.இந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
16மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208கோடி ரூபாவாகும்.
இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி குறித்த விமானக்கொள்வனவை ஜனாதிபதி நிறுத்தியுள்ளார்.
அத்துடன் அந்த பணத்தை மக்களின் நலன்புரிகளுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.