-இப்னு ஜமால்தீன்-
மறிச்சிக்கட்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக நேற்று (2014-04-05) மறிச்சிக்கட்டிக்கு விஜயம் செய்தார்.
1990 ம் ஆண்டு புலிகளால் துரத்தப்பட்ட இம்மக்கள் இப்பிரதேசத்தை விட்டு விரட்டப்பட்டவேளை 65 குடும்பங்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது 270 குடும்பங்களாக அதிகரித்திருப்பதனால் மறிச்சிக்ட்டி முஸ்லிம்கள் இடப்பிரச்சினயை எதிர்நோக்கி வருகின்றனர்.தமது பூர்வீகக் காணிகளில் காணிகளை பெற்றுக்கொள்வதில் இம்மக்கள் பல இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை தன்னந்தனியாக நின்று பல இடர்பாடுகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றிவரும் அமைச்சர் ரிசாத் மறிச்சிக்கட்டி முஸ்லிம்களுக்கு காணிகளையும் வீடுகளையும் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டு வருவதுடன் இப்பிரதேசத்திற்கு தொடர்ச்சியான செய்வதன் மூலம் மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் தேவைப்பாடுகளையும் இடர்பாடுகளையும் நிபர்த்தி செய்து வருகின்றார்.
அமைச்சர் ரிசாத் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த வேளை இப்பிரதேசத்திற்கு கள ஆய்வினை மேற்கொள்வதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் உறுப்பினர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு இம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தன்னால் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கி கூறுவதை படத்தில் காணலாம்.
புகைப்படம் -LM