இர்ஷாத் றஹ்மத்துல்லா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்.வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன ரிீதியான ஒற்றுமைக்கு எமது மக்கள் காத்திரமான பங்களிப்பை இந்த நாட்டில் செய்துவந்துள்ளார்கள் என்றும் கூறினார்.
புத்தளம் பாலாவி இல்மியா அரபிக் கல்லுாரியின் 3 வது அல்-ஹாபிழ் டிப்ளோமா பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா வைபவம் இன்று 2015-02-04 ஹூசைனியா புரம் மஸ்ஜிதுல் பலாஹ் பெரிய பள்ளிவாசல் பொது மைதானத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபாவா பாரூக்.அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் புத்தளம் மாவட்ட தலைவரும்.காசிமிய்யா அரபுக் கல்லுாரியின் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம்.ஜமிய்யத்துல் உலமா சபையின் முன்னாள் செயலாளர் அஷ்-ஷேய்க் அப்துல் நாசர் ( றஹ்மானி)உள்ளிட்ட தொழிலதிபர்கள்.அரசியல் பிரிதி நிதிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் –
இந்திய அரசாங்கம் 50000 வீட்டுத் திட்டமொன்றினை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளது.மன்னார் மாவட்டத்தில் இந்த தெரிவில் 30 தமிழ் கிராமங்கள் 7 முஸ்லிம் கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டன.இதில் பெரியமடு.விடத்தில்தீவு மக்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
துரதிஷ்டம் வீடமைப்பு திட்டம் நடை முறைக்கு வந்த போது இம்மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவில்லை.இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை செய்யவுள்ளேன்.அதே வேளை இது தொடர்பில் ஆராய குழுவொன்றினையும் அமைத்துள்ளேன்.
இன்று இடம் பெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன்.இந்த அரபுக் கல்லுாரியின் செயற்பாடுகளுக்கு இன்ஷா அல்லாஹ் எனது பங்களிப்பு இருக்கும் என்றும் அமைச்சரும்.தலைவருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
அல்-ஹாபிழ் பட்டம் பெறும் மாணவர்களின் பெயர்கள் வருமாறு-
1-பஷீர் இம்தியாஸ் மன்சூர் -வெளிமல.இலந்தைக்குளம்-சிலாவத்துறை
2-அலாவுதீன் நஜ்ரான் அஹ்மத் -எருக்கலம்பிட்டி -மன்னார்
3-அப்துல் ஜப்பார் முஹம்மத் சஹீர் -ஹூசைனியா புரம்-பாலாவி
4-பஷீர் நப்ஹான் -கொண்டச்சி -சிலாவத்துறை
5-முஹம்மத் அலி அஸ்பர் – மணல் குளம் -சிலாவத்துறை
6-அல் குத்துாஸ் முஹம்மத் சரூஸ் – ஹூசைனியா புரம்-பாலாவி
7-ஹனஸ் சுல்பார் முஹம்மத் அஷ்ரப் -அல்-காசிம் சிட்டி -புத்தளம்
8-சல்பிகான் நஸ்ரி அஹமத் -இல்மிய்யாபுரம்-பாலாவி
9-முஹம்மத் உவைஸ் எம்.சராப் -ஹூசைனியா புரம்-பாலாவி
10-காலித் முஹம்மத் ருஸ்தி -ஹூசைனியா புரம்-பாலாவி
11-இஸ்மத் இனானுன் லுக்மான் – ஹூசைனியா புரம்-பாலாவி
12-முஹம்மத் உவைஸ் எம்.சுரியாப்- ஹூசைனியா புரம்-பாலாவி
13-மஹம்மத் மாஹிர் அப்துர் ரஹ்மான் – ஹூசைனியா புரம்-பாலாவி
14-நசார் முஹம்மத் நஸ்ஹான் -கரம்பை-பாலாவி
15-இக்பால் முஹம்மத் சயீத் – ஹூசைனியா புரம்-பாலாவி
16-ஜூனைதீன் முஹம்மத் றியாஸ் – பாலக்குளி-சிலாவத்துறை
17-அஜ்மீர்கான் முஹம்மத் அஸ்வின் -பி.பி.பொற்கேணி-சிலாவத்துறை
18- அல்குத்துாஸ் முஹம்மத் சப்ரான் – ஹூசைனியா புரம்-பாலாவி