பொதுபலசேனா அதிதீவிரவாத இயக்கமாகும். இவ் இயக்கம் முஸ்லீம்களின் மீது தொடர்ந்தும் வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களின் பொறுமையை சோதிக்க நினைக்கின்றது. பௌத்தர்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு அதில் குளிர்காய நினைக்கும் இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை. என வடக்கு மாகணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார்.
நாமும் இந்த நாட்டின் தேசிய இனமே. நாம் இங்கு வந்தான் வரத்தான் அல்ல. அமைதியாக வாழ்ந்து வரும் எம்மீது அடவாடித்தனத்தையும், அடக்குமுறையையும் பிரயோகித்து காட்டுமிராண்டித்தனமான இந்த இனவாத சக்திகளின் கொட்டம் அடங்கும் நாள் வெகுதூரத்தல் இல்லை.
வடமாகாண முஸ்லீம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக அகதிமுகாம்களினல் மிகவும் கேவலமான மற்றும் எவ்வித அடிப்படை வசதிகளுமற்று வாழ்ந்து வருகின்றனர். சமாதனாம் ஏற்பட்ட பின்னர் வடக்குக்கு போய் மீள் குடியேறி தமது வாழ்விடங்களில் வாழத் துடிக்கும் எமது மக்கள் மீது வீன் பழி சுமத்துகின்றனர். எம்மை மீள் குடியேற்றுவதற்கு முயற்சிக்கும் எமது பிரநிதியான அமைச்சர் றிசாத்பதியுத்தீன் மீது அபாண்டமான பழிகளை இந்த பொதுபலசேனா சுமத்துகின்றது.
காடாகிப்போன நமது காணிகளை நாம் துப்பரவாக்க முயலும்போது அது வில்பத்துக்குச் சொந்தமானதொரு காணி என வீன் கதையை பரப்பி எம்மை துண்புருத்துகின்றனர். பௌத்த மக்களிடையேயும் முஸ்லீம்களைபற்றி இனத் துவேச கதைகளை பரப்பி இன ஜக்கியத்தை குழப்புகின்றனர். இந்த பலசேனாவின் குறிக்கோள் இந்த நாட்டில் வாழும் இன்னொரு சமுகமான முஸ்லீம்களையும் பௌத்த மக்களையும் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதாகும்.
வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லீம்கள் அன்று இந்த நாட்டினை பிரிவினைவாதிகளுடன் இணைந்திருந்தால் இந்த சேனாக்களுக்கு வில்பத்துபூமியில் இன்று காலடி வைக்க முடியுமா? முஸ்லீம் சமுகம் ஒருபோதும் பிரிவினைவாதத்pற்கு துணைபோகவில்லை. இரண்டு சமுகங்களின் ஒற்றுமைப் பாலமாகவே அன்று தொட்டு இன்று வரை இருந்து வந்திருக்கின்றார்கள்.
இந்த சேனாக்கள் மேலைத்தேயச நாடுகளின் சிலரது நிகழ்ச்சிநிரலுக்கு துணைபோகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பாரிய நிதி உதவிகளைப் பெற்றுவருகின்றனர். அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாளுக்கு நாள் இவர்கள் முஸ்லீம்களை தாக்குவதும் அதனை ஊடகங்களுக்க பரப்புவதுமாகவே செயல்படுகின்றனர்.
இவர்கள் யுத்தத்திற்கு பிறகு நாட்டில் சமாதாணம் ஏற்பட்டதன் பின்னர் முளைத்த இயக்கமாகும். இவர்கள் ஆரம்பத்தில் ஹலால் பிரச்சினை என்றார்கள், ஜம்மியத்துல் உலாமா, முஸ்லீம்களின் பர்தா, அரபுமத்ராசாக்களில் ஆயுத பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாhகள், பள்ளிவாசகளை, வியாபாரநிலையங்கள் ஆகியவற்றை தாக்கினார்கள், நகரங்கடையே சென்று கூட்டங்களை கூட்டி நகரில் உள்ள வியாபார நிலையங்களை தாக்குங்கள் என்றார்கள். முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் என்றார்கள்.
அவை அணைத்திலும் இவர்கள் தோல்வியுற்றனர். இவ் விடயங்களில் முஸ்லீம்கள் பொறுமை காத்தனர் தற்பொழுது முஸ்லீம் அரசியல்வாதியான அமைச்சர் றிசாத்பதியுத்தீன் மீது சேறுபூசும் செயற்பாடுகளுக்கு இறங்கியுள்ளனர். இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களையும் எவ்வாறு எல்லாம் சினம் கொள்ளச் செய்ய முயற்சிக்கின்றாகளோ அவை அத்தனையும் இறைவன் தோட்கடிப்பான் என வட மாகணசபை உறுப்பினர் றிப்காண் தெரிவித்தார்