இஸ்லாமிய தேசம் (ஐ. எஸ்.) குழுவுக்கு எதிரான அமெரிக்கா தலைமை கூட் டணியின் பிரதான அரபு உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் சிரியாவில் வான் தாக்குதல்களை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர்.
ஜோர்தான் விமானப்படை விமானி ஐ.எஸ். இடம் சிக்கியதை அடுத்து விமானிகளின் பாதுகாப்பைக் கருத் தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் சிரியாவில் ஐ. எஸ். இலக்கு மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோர்தான் விமானம் விழுந்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சி யம் வான் தாக்குதல்களை இடை நிறுத்தியதை என்னால் உறுதி செய்ய முடியும்” என்று பெயரை வெளியி டாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப் பிட்டுள்ளார். எனினும் இந்த கூட்டணியில் அதிக பங்களிப்புச் செய்யும் மிக முக்கிய நாடு ஐக்கிய அரபு இராச்சியம் என்பதை என்னால் குறிப் பிட முடியும்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.இன் பிடியில் சிக்கிய ஜோர்தான் நாட்டு விமானி முவஸ் அல் கஸஸ்பே உயிரோடு தீ மூட்டி கொல்லப்படும் வீடியோவை ஐ.எஸ். நேற்று முன்தினம் வெளியி ட்டிருந்தது. சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது ஐக்கிய அரபு இராச்சியத்தோடு பஹ்ரைன், ஜோர்தான், சவதி அரேபியா ஆகிய நாடுகள் வான் தாக்குதல்களை நடத்தி வந்தன.
மறுபுறம் அவுஸ்திரே லியா, பெல்ஜயம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், நெத ர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் ஈராக்கில் ஐ.எஸ். இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வான் தாக்குதல்களில் முக் கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா 80 வீதமான வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.