Breaking
Mon. Dec 23rd, 2024

விடுதலைப் போர் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளையும் உயிர் காவுகளையும் முன் கொண்டு வருவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்க்குச் சொல்ல வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

 கிழக்கு மாகாண சபையின் மாதர்ந்த அமர்வு கடந்த மாதம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

நாட்டில் இடம்பெற்ற 30வருட கால யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் கூடியளவு பாதிக்கப்பட்ட சமூக முஸ்லிம் சமூகம் காணப்படுவதனால் யுத்ததின் பின்னரான மனித உரிமைகள் பற்றி பிரஸ்தாபிக்கும் சர்வதேச சமூகத்திற்கு இன்னுமோர் சிறுபான்மை சமூகத்தின் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் விடயத்தினை ஜெனீவா மனித உரிமை பேரவையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினை எதிர்கொள்ளும் முகமாக அதிகளவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் இருப்பதனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு முஸ்லிம் தூதுக்குழுவினை ஜெனீவா செல்ல அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பிரேரணையை இச்சபை முன் முன்மொழிகின்றேன்.

கடந்த 30 வருடங்களாக தமிழீல விடுதலை போர் என்ற பெயரில் இந்த நாட்டில் பல்வேறுபட்ட அழிவுகளையும்இ மனித அவலங்களையும் ஏற்படுத்திய அந்த காலகட்டத்தில் மிக மோசமாக புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட அந்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆகும் முஸ்லிம்களை நேரடியாக இனரீதியாக கொன்றவர்கள் புலிகள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரச தரப்பினர் தமிழர்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த 30 வருட காலயுத்தத்தில் ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கான முஸ்லிம் உயிர்கள் கொல்லப்பட்டன அவற்றுள் அரசியல் தலைவர்கள் ஆன்மீக தலைவர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் அரச உயர் அதிகாரிகள் பாமர மக்கள் சிறுவர்கள் என ஒவ்வொரு ஊர்களிலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

குறிப்பாக காத்தான்குடி ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் 1990ம் ஆண்டு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பது அதாவது காத்தான்குடி பள்ளிகளில் சுஜுதுகளில் இருந்த முஸ்லிம்களை கோளைத்தனமாக பின்னால் சென்று தாக்கி 103 முஸ்லிம் சகோதரர்களை பள்ளிவாயலில் மரணிக்கச் செய்தது மட்டுமல்லாமல் 146க்கும் மேற்பட்டவர்கள் இன்று வரையில் ஊனமுற்றவர்களாக காணப்படுகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல் இரவு வேளைகளில் தூங்கிக் கொண்டிருந்த ஏறாவூர் சதாம் {ஹஸைன் கிராமத்தில் புகுந்து 121 முஸ்லிம் சகோதரர்கள் வெட்டியும் குத்தியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள்.  இங்கு மனித உரிமைகள் எந்தளவு மீறப்பட்டிருந்தது என்பதற்கு இரண்டு உதாரணங்களை நான் முன்வைக்கின்றேன். தனது சுய அறிவை பயன்படுத்தக் கூட வலிமை இல்லாத 08மாத குழந்தை தனது தாயின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கும் போது அந்த தாயின் மார்பு வெட்டப்பட்டும் அந்த பிள்ளையின் முகம் இரண்டாக பிரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்;. இது ஓர் மனித உரிமை மீறல் இல்லையா ? என நான் கேட்க ஆசைப்படுகின்றேன்.

அதுமட்டுமல்லாமல் தொப்புல்கொடி வெட்டப்பட்டு இரண்டு நாளான அதாவது அந்த தொப்புல் கொடியில் இருக்கின்ற இரத்தம் கூட அழியாத நிலையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தையின் வாய்க்குள் துப்பாக்கியை பதித்து அன்று சுட்டுக் கொல்லப்பட்ட அந்தக் குழந்தை இந்த நாட்டிற்க்கோ இந்த சமூகத்திற்கோ அல்லது எந்த ஒரு உயிரினத்திற்க்கோ என்ன அநியாயம் செய்தது? அந்தக் குழந்தை ஏன் கொல்லப்பட்டது? இந்த மனித உரிமை மீறல்களை ஏன் நாங்கள் சுட்டிக் காட்டக் கூடாது என்பதை நான் உங்களிடம் கேட்க ஆசைப்படுகின்றேன்.

மேலும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் யாழ்பாணத்தில் பிட்டும் தேங்காய்பூவுமாக மனம் பூரிக்கின்ற அளவிற்கு வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் முஸ்லிம் சகோதரர்களை அவர்கள் உடுத்த உடுப்புடன் 25000 குடும்பங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள் எனவே இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா என நான் உங்களை கேட்க ஆசைப்படுகின்றேன்.

1990ம் ஆண்டுகளுக்கு பிறகு 33 சிறிய மற்றும் பெரிய கிராமங்களை இல்லாதொழித்து அம்மக்களை அவ்விடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் 4436 குடும்பங்கள் மீண்டும் அவ்விடங்களுக்குச் செல்ல இயலாமல் திண்டாடிக் கொண்டிருப்பது மனித உரிமை மீறல் இல்லையா என நான் உங்களை கேட்க ஆசைப்படுகின்றேன்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கூடுதலான உயிர்கள் காவு கொண்ட பிரதேசமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது என்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 1990.07.12ம் திகதி அம்பாறையிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறுவதாக இருந்தால் அவர்கள் செல்கின்ற அந்த வீதி இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்        இவ் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மாத்திரமே செல்ல முடியும். அவ்வாறான கால கட்டத்தில் 1990.07.12ம் திகதி தங்களுடைய உறவுகளுக்கு எந்தவிதமான உணவுப் பொருட்களும் இல்லை அங்கிருக்கிருக்கின்ற குழந்தைகளுக்கு பால்மா கூட கிடையாது என்று அங்கிருந்த காத்தான்குடி இளைஞர் சமூகம் சிந்தித்தது.

அதனூடாக தங்களுடைய உயிரை பணயம் வைத்தாவது கல்முனைக்கு அல்லது கொழும்புக்குச் சென்று கல்முனை வீதியனூடாக இந்த மக்களுக்கு உணவுகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று சென்ற அவர்கள் சென்று திரும்பும் வழயில் குருக்கள்மடம் என்ற இடத்தில் வைத்து 162க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு இன்று வரைக்கும் அவர்கள் காணமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி போன்ற இடங்களிலிருந்து மீன்பிடிக்கச் செல்ல முடியாது ஆற்றங்கரைக்கு மீன்பிடிக்கச் சென்றால் அவர்களது உடல்கள் மாத்திரமே திரும்பி வரும் அதேபோன்று கடற்கராக்கு மீன்பிடிக்கச் செல்வார்களேயானால் இறந்த மீன்கள் கரையொதுங்குவது போன்று அவர்களது உடல்கள் கரையொதுங்கி வரும் அதனை நாங்களே எங்கள் கைகளால் எடுத்து அடக்கியுள்ளோம்.

இவைகளை நான் குறிப்பிடுவதன் நோக்கம் பழைய விடயங்களை மீட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக சர்வதேசம் இந்த கொடூர யுத்தத்தில் இன்னுமோர் சிறுபாண்மை இனம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீதி என்று சொல்கின்ற பொழுது அது பாதிக்கப்பட்ட சமூகம் அனைத்திற்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

ஜெனீவா பிரேரணைக்கு முஸ்லிம் குழுவொன்றை அனுப்ப வேண்டும் என்பதற்கு நான் கூறும் காரணம் இதற்கு முன்பாக 2000ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிலிருக்கின்ற பொழுது சமாதான பேச்சுவார்த்தை நோர்வையின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வேளையில் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக முஸ்லிம்கள் எந்தளவு அடிமைகளாக இருந்தார்கள் என்பது எமக்கு தெரியும். 1990களில் நடந்த அந்த மனித அவலங்களுக்கு பிறகு உங்களுடைய பேச்சுவார்த்தைக்கு நாங்களும் மூன்றாம் தரப்பாக வருகின்றோம் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு சமனாக இல்லாவிட்டாலும் சற்று குறைவாக வாழ்கின்றோம என்று அன்றைய முஸ்லிம் சமூகம் கேட்டுக் கொண்டது ஆனால் அன்று அவர்களது உரிமை மறுக்கப்பட்டது.

மேலும் அன்று யப்பானில் நோர்வேயின் தலைமையில் இடம்பெற்ற அந்த மனித உரிமை கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் தலைவர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் முஸ்லிம்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்று கேட்டார்கள். அன்று அதனை தட்டிக் கேட்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் யாருக்கும் துணிவு இருக்கவில்லை மீறி அவ்வாறு கேட்டால் அன்று இரவு அவரது வீட்டில் புலிகளால் அவர்கள் சுட்டு கொல்லப்படுவார்கள் அந்த அச்சுறுத்தலின் காரணத்தால் அவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது சமாதானம் ஏற்படுத்தப்பட்டு அந்த சமாதானத்தின் ஊடாக சிறுபான்மை இனத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்காஇ ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகள் பிரகடணப்படுத்துகின்ற பொழுது இந்த முஸ்லிம் சமூகத்திற்கு இழகை;கப்பட்ட அநீதிகளையும் அவர்களுக்கு இழைக்கப்பட் கொடுமைகளையும் அவர்களுக்கு மீறப்பட்ட மனித உரிமைகளையும் ஏன் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள்இ அதனை நாம் ஏன் அவர்களுக்கு ஜெனீவாவில் சொல்லக் கூடாது? பாதிக்கப்பட்ட சமூகம் நாங்கள் அதனை ஜெனீவாவில் சொல்ல வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.

2004ம் ஆண்டு முதன் முதலாக புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது ஒரு பத்திரிகையாளர் நீங்கள் பள்ளியில் சுட்டீர்கள் யாழ்ப்பாணத்தில் 25000 முஸ்லிம்களை வெளியேற்றினீர்கள் இது சம்பந்தமாக நீங்கள் என்ன கூறுகின்றீhகள் என்று கேட்டபொழுது அது ஒரு துன்பியல் சம்பவம் இதனை நீங்கள் இப்பொழுது பேசக்கூடாது என்று கூறினார்.

எனவே இந்த பயங்கரவாத மனித உரிமை மீறல் செயற்பாடுகள் யாரால் மேற்கொள்ளப்பட்டது என்று உர்ஜிதப்படுத்தப்பட்டதன் பின்பும் அந்த விடயம் ஜெனீவாவில் பேசப்படவில்லை என்பதை நான் மிகவும் மன வேதைனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Related Post