பா.சிகான்
யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவகங்களில் விற்கப்பட்ட சில உணவு வகைகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள உணவகங்களும் விலைகளை உடனடியாக குறைக்குமாறு யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெய்சேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவக உரிமையாளர்களுடன் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது உணவக உரிமையாளர்கள் விலை குறைப்பினை மேற்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், முன்னர் 15 ரூபாவிற்கு விற்பனை செய்த தேனீர் 10 ரூபாவிற்கும்இ பால் தேனீர் 30 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது 25 ரூபாவிற்கும், பசுப்பால் தேனீர் 30 ரூபாவிற்கும் கோதுமை ரொட்டி 20 விற்பனை செய்யப்பட்டது 15 ரூபாவிற்கும், வடை சாதாரணம் 20விற்கானது 15 ரூபாவிற்கும், பெரியது 30 ரூபாவிற்கானது 25 ரூபாவிற்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இட்லி மற்றும் ஏனைய உணவுகள் எதிர்காலத்தில் விலை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில்இ இந்த உணவுகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் யாழ் முஸ்லீம் பகுதி கடைகளில் பழைய விலையில் தற்போது சிற்றுண்டி மற்றும் பால் என்பன விற்கப்படுகின்றன.