சுவிஸிலிருந்து இளைஞரொருவரே, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் விடுத்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாகவே நாமல் ராஜபக்ச, சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
2010ம் ஆண்டு துஸார, இறுதி சட்டப் பரீட்சையை எழுதிய வேளையில் நாமல் ராஜபக்சவுக்கு தனியான குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பரீட்சை நடத்தப்பட்டது. இது முழுமையாக சட்டமீறல் சம்பவமாகும்.
இந்தநிலையில் சட்டப்பரீட்சையின் வினாத்தாள்கள், நாமல் ராஜபக்சவுக்கு முன்கூட்டியே கிடைக்கப் பெற்றதாகவும் துஸார குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனையடுத்து நாமல் ராஜபக்ச அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன் ஏனைய சட்டபீட மாணவர்களுக்கு வழங்கப்படாத வாய்ப்பான நீதிமன்றத்துக்குள் வைத்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பில் தாம் முறையிட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக துஸார குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் துஸார சுட்டிக்காட்டியுள்ளார்.