கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.
கொழும்பு தெமட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறப்பிட்டார்.
இந்த கட்சி முறை என்பது இந்த நாட்டிலிருக்கும் பாரிய புற்றுநோயாகும். இந்த கட்சி முறைமையினால் நாம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, யூ.என்.பி, ஜே.வி.பி என பிரிந்து, பிரிந்து எமக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. இந்த கட்சி முறைமையை ஒரு புறம் வைத்து விட்டு, நாட்டின் எதிர்காலத்திற்காக செயற்பட வேண்டிய இயலுமை எமக்கு ஏற்பட வேண்டும். ஊழல், மோசடி, பலாத்காரம் இல்லாத நாடொன்றை கட்டியெழுப்பவே இன்று எதிர்பார்க்கப்படுகின்றது.