ஹம்பாந்தோட்டையில் வட்டான, நுங்கம எனும் பிரதேசத்தில் சீனநாட்டின் முதலீட்டில் பட்டரி உற்பத்தி செய்யும் பெக்டரியில் பணியாற்றிய 300 ஊழியர்களில் 23 பேருக்கு உடம்பில் ஈயம் உட்புகுந்துள்ளது. மேலும் 268 பேருக்கு 46வீதம் பெற்றறி ஈய நச்சுத் தன்மை உடம்பில் உட்புகுந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேற்படி விடயமாக இன்று(09) நாரேஹேன்பிட்டியில் உள்ள ஊழியர்கள் திணைக்களத்தில் நடாத்திய ஊடகவியாலாளர் மாநாட்டின்போதே மேற்கண்ட தகவலை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊழியர் திணைக்களத்தின் ஆணையாளர், குறிப்பிட்ட கம்பனியின் பிரதிநிதிகள், ஹம்பாந்தோட்டையில் பணியாற்றிய ஊழியர்கள் பிரதிநிதிகள் சீன முதலீட்டாளர்களையும் அழைத்து மேற்படி விடயமாகவும் ஊழியர்களது நலன்பேனும் வகையில் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச
இப் பெக்டரியை அமைப்பதற்கு எவ்வித சூழலியல் இயற்கை வள அறிக்கை, ஊழியர்களது சுகாதார நலன், இலங்கைக்கு கொண்டுவருகின்ற கெமிக்கல்ஸ் வகைகள் இந்த ஈயம் போன்ற கெமிக்கல் உற்பத்தி செய்யும் போது சேர்த்துக்கொள்ளப்படும் ஊழியர்களது உயிர் உறுப்புக்கள் பற்றிய வைத்திய அறிக்கை எவ்வித அனுமதியும் இன்றி இக் கம்பனியை முன்னைய ஆட்சி அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர்.
இப் பெக்டரி கடந்த வாரம் ஊழியர் திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டள்ளது. ஆனால் இந்த ஊழியர்களது சம்பளம், காப்புறுதி வைத்திய காப்புறுதி மற்றும் அவர்களது உயிருக்கு இருக்கின்ற சகல ஆபத்துக்களுக்கும் இந்தக் கம்பணி நிதி செலுத்தல் வேண்டும். மேலும் இந்தப் பிரதேசம் முழுவதும் பெட்டரி கழிவுகள் விடப்பட்டு அப்பிரதேச கால்வாய்கள் வாவிகள் ரைகேம், நுலுனுவில வாவிகளில் கலந்துள்ளன. இதனால் இப்பிரதேசமும் இயற்கையினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயமாக இப் பெக்டரியை அமைக்க முன்னர் இப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்டும் ஹம்பாந்தோட்டை அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தப்பட்டு அவர்களது ஜனாநாயக உரிமையைக் கூட பறித்துள்ளார்கள்.
தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள 300 ஊழியர்களது உயிருக்கு யார் உத்தரவாதம் வழங்குவது ? இதனை ஊடகவியலாளர்கள் ஹம்பாந்தோட்டையில் வட்டான நுங்கம பிரதேசத்திற்கு சென்று இதனை பிரச்சாரம் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். தற்போதைய அரசில் சீன நாட்டில் உள்ள மனித உயிருக்கு ஆபத்தான கம்பணிகளை இலங்கையில் முதலிட அனுமதிக்கக் கூடாது. எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட அரச நிறுவணங்களையும் வேண்டிக் கொண்டார்.
இவ் விடயமாக கருத்து தெரிவித்த ஊழியர் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (சுகாதாரம்) வஜிர பலிப்பான – இவ் ஊழியர்கள் 300 பேரையும் வைத்திய பரீட்சைக்கு உட்படுத்தினோம். இதில் 50 பேருக்கு 46வீதமும் அதில் 1டெல்லி லீட்டர் ஈயம் உட்புகுந்தால் முதலில் முளை, சிறுநீரகம் சிறுக சிறுக பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கு கடமையாற்றிய ஒரு கர்ப்பிணித் தாய்க்கும் இந்த ஈய நஞ்சு உட்புகுந்துள்ளது. இதில் அவரது சிசுவுக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.