வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியும், மலிவு விற்பனையும் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறித்த கண்காட்சியை இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் வி.பவாகரன் மற்றும் மன்னார் பிரதேசச் செயலக பணியாளர்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த இடத்திற்குச் சென்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் கண்காட்சியை பார்வையிட்டதோடு அங்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.
அமைச்சருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,அமைச்சரின் இணைப்பாளர் என.எம்.முனவ்பர் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.