Breaking
Tue. Nov 26th, 2024

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய குழந்தைகளின் எண்ணிக்கை பிரிட்டனில் இரட்டிப்பாகி இருப்பதாக பிரிட்டனின் டெயிலி மெயில் என்ற பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது மொத்தத்தில் பிரிட்டனில் கடந்த பத்து ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 75% உயர்ந்திருப்பதாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது

2001 ஆண்டில் வெறும் 15 இலட்சமாக (1500000) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை தர்போது 27 இலட்சமாக (2700000) உயர்ந்துள்ளது இது 75% சதவீத வளர்ச்சியாகும் பத்து ஆண்டுகளில் மட்டும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12 இலட்சம் (1200000) அதிகரித்திருப்பது உண்மையிலேயே வியப்புக்கு உரிய விசயமாகும்

பிரிட்டன் முஸ்லிம்களின் சபை எடுத்துள்ள புதிய மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் பிரிட்டன் கல்விகூடங்களில் ஒவ்வொரு 12 மணவர்களிலும் ஒரு முஸ்லிம் மாணவன் இருக்கிறான் பிரிட்டன் முஸ்லிம் மாணவாகளில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் சரிபாதி 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 2021 ஆம் ஆண்டில் இது மேலும் இரட்டிப்பு ஆகும் என்று ஆக்ஸ்போட் பல்கலைகழகத்தின் பேராசிரியகளில் ஒருவரான் சுன்துஸ் தெரிவித்துள்ளார்

இதன் அடிப்படையில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி இஸ்லாம் பிரிட்டனில் முன்னேறி கொண்டு இருப்பதாக பலர்களும் கூறியுள்ளனர்.

Related Post