Breaking
Thu. Nov 7th, 2024

(அஸ்ரப் ஏ சமத்)

கடந்த காலங்களில் பிரச்சிணைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக சபையைத் தெரிபு செய்து முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இவ் விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷஷேக் றிஸ்வி முப்தி, செயலாளர் அஷ;ஷேக் அஹ்மத் முபாராக் உறுப்பிணர் முக்ஸித் அஹ்மத் ஆகியோர் முன்னிலையில் இரண்டு ஹஜ் முகாவர்கள் சங்கள் அழைக்கப்பட்டு கலந்தாலேசிக்கப்பட்டனர். அக் கூட்டத்தில் பின்வருவோர் தற்காலிக நிருவாகத்துக்கு தெரிபு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர் – அல்ஹாஜ் ஏ.எம். றிஸ்வி (ட்ரவல்ஸ்) உப தலைவர் ஏ.எல்.எம் கலீல், (புராக் ட்ரவல்ஸ்) செயலாளர் எம். அல்தாப், (டிரான்ஸ் வேல்ட்) பொருளாளர் எம். அஷன் (பரக்கத் ரவல்ஸ்)
குழு உறுப்பிணர்கள் –

எம். நெய்தர்,(அல் அக்ஷ டரவல்ஸ்) எம். பாரிஸ்,(எப்.என்.எம் ரவல்ஸ்) மௌலவி எம். ஹூசைத்தீன்.(உம்முல் குரா) எம். நஜீப், (எம்.என் ட்ரவல்ஸ்) மௌலவி எம். அலியார், (ஹிரா ட்ரவல்ஸ்) எம். முஹம்மத் (என்.எம் ட்ரவல்ஸ்) எம்.ஆர்.எம் பாருக் (சேப்வே ரவல்ஸ்)

Related Post