கடந்த நான்கு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைப் போல் அளுத்கமை மற்றும் பேருவளை கொலைகளுக்கு தூண்டுகோளாக இருந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை என அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிள்ளது.
இதேபோல் முஸ்லிம்கள் தொடர்பில் வழங்கப்பட்ட பல உறுதி மொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
-Ada Derana-