Breaking
Thu. Nov 14th, 2024

ஜோர்தானில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் ஒருவருக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸை விமர்சித்திருந்த குற்றச்சாட்டில் 18 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானில் முக்கிய எதிரணி புள்ளி ஒருவருக்கு எதிராக, கடந்த பல ஆண்டுகளில் இப்படியான வழக்கொன்று இப்போது தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றுடனான உறவை பாதிக்கும் விதத்தில் ஸாக்கி பானி இர்ஷாய்ட் கருத்து வெளியிட்டுள்ளதாக இராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜோர்தானின் முக்கிய நிதி ஆதார நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளங்குகின்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்புக்கு எதிரான அந்நாட்டின் போக்கை விமர்சிதது இர்ஷாய்ட் பேசியிருந்தார்.

ஜோர்தானில் அரசியல் சீர்திருத்தம் கோரும் முக்கிய நபர்களில் முஸ்லிம் சகோதரத்துவத்தின் துணைத் தலைவரான இர்ஷாய்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post