விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும இன்று கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச் சீட்டை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர பாராளுமன்ற உறுப்பினருக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அகலவத்தை நகரில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றின்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழந்தாளிடவைத்த சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.(nf)