எந்த காரணத்திற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் வீட்டுக்கு போகின்றனர் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்பினரின் ஆயுதங்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொலிஸார் விசாரணை நடத்தும் போது கோத்தபாய ராஜபக் ஷவுக்கு மாத்திரம் விசேட சலுகை இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தான் விடுத்த சவாலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.(vk)