அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் (என்.எஸ்.ஏ.), வெஸ்டன் டிஜிடல், சீகேட், டொ’பா மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கணனிகளின் ஹாட் டிரைவ்களில் உளவு மென்பொருளை மறைத்து வைத்திருக்கும் விடயம் அம்பலமாகியுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவுக்கு உலகில் இருக்கும் மிகப் பெரும்பான்மையான கணனிகள் ஊடே உளவு வேலையில் ஈடுபட முடியும் என்று ரஷ்யாவை மையமாகக் கொண்டு இயங்கும் கணனி பாது காப்பு மென்பொருள் தயாரிப்பு நிறு வனமான காஸ்பர்ஸ்கி கண்டறிந்துள்ளது.
உலகில் உள்ள 30 நாடுகளின் தனி நபர் கணனிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உளவு மென்பொருள் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக காஸ்பர்ஸ்கி குறிப்பிட்டுள்ளது. இதில் ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு அடுத்த இடங்களில் ரஷ்யா, பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான், சீனா, மாலி, சிரியா, யெமன் மற்றும் அல்ஜPரியா நாடுகள் காணப்படுகின்றன.
அரசு மற்றும் இராணுவ நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், வலுசக்தி நிறுவனங்கள், அணு ஆராய்ச்சியகங்கள் மற்றும் இஸ்லாமிய செயற்பாடுகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக காஸ்பர் ஸ்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த உளவு வேலையைச் செய்யும் நாட்டை காஸ்பர்ஸ்கி நிறுவனம் வெளிப் படையாக குறிப்பிடாதபோதும் இது ஸ்டுக்ஸ்நெட்டுடன் தொடர்புபட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்டுக்ஸ் நெட் இணைய ஆயுதம் ஈரான் யுரே னிய செறிவ+ட்டல் தளத்தை தாக்குவதற்கு என்.எஸ்.ஏவினால் பயன்படுத் தப்பட்டதாகும். என்.எஸ்.ஏ. நிறுவனம் அமெரிக்காவின் இலத்திரனியல் உளவு வேலையில் ஈடுபடும் நிறுவனமாகும்.
காஸ்பர்ஸ்கியின் இந்த ஆய்வு முடிவு சரியானதென்று என்.எஸ்.ஏவின் முன்னாள் பணியாளர் ஒருவர் ராய்ட்டருக்கு உறுதி செய்துள்ளார். காஸ் பர்ஸ்கியின் அறிக்கையை அறிவதாக குறிப்பிட்டிருக்கும் என்.எஸ்.ஏ. நிறுவன பேச்சாளர் வெனீ வினஸ், அது குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட மறுத்துள்ளார்.
ஏற்கனவே என்.எஸ்.ஏவின் முன்னாள் பணியாளர் எட்வட் ஸ்னோடன் அதன் உளவு வேலைகள் குறித்து அம்பலப்படுத்திய நிலையில் புதிய தகவல்கள் அந்த நிறு வனத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.