அஷ்ரப் எ சமத்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அதன் எழுச்சியும் இந்த நாட்டின் கல்வியலாளர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரைக்கும் இன்று பேசப்படுகின்ற ஒன்றாகும்.
கடந்த காலத்தில் அது தன்னுடைய இலட்சியப்பயனத்தில் பல்வேறு தடங்களை தேசிய ரீதியாக பதித்துவருவது சமூகத்தின் பல மட்டத்தினராலும் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது.
இது ஒரு அபரிமிதமான குறிப்படத்தக்க வளர்ச்சி என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த சில வருட காலப்பகுதிக்குள் பல்வேறு அடைவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த பல்கலைகழகம் ஒழுங்கு செய்த ஆய்வரங்குகள் தேசிய ரீதியில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் தன்னை புடம்போட்டுகொள்வதற்கு சந்தர்பங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திகொடுத்தது என்றால் மிகையாகாது.
தனது அடைவுகளையும் தனது உற்பத்திகளையும் உலகுக்கு பறை சாட்டுகின்ற ஒரு நிகழ்வு மட்டுமல்லாது பன்னாட்டு ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது நாட்டின் பழக்கவழக்கம், பண்பாடு, நிகழ்வுகள், நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள், நாட்டின் முன்னேற்றதுக்கான வழிமுறைகள், கையாள வேண்டிய உபாயங்கள் பற்றியெல்லாம் சிலாகிக்கிற ஒரு நிகழ்வாகும்.
அதன் தொடர்ந்தேர்ச்சியான நிகழ்வாக எதிர்வரும் 04.03.2015 இல் சர்வதேச ஆய்வரங்கு ஒன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய பீடத்தினால் மதங்கள், மொழிகள், கலாச்சாரம், சமூக கட்டமைப்பூடாக தேசிய அபீவிருத்தியை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது சமூகத்தின் பல தரப்பினராலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.
அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரபு இஸ்லாமிய பீடம் ஒன்று அமையப்பெற்றிருப்பது இலங்கை முஸ்லிம்கள் பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும் என்றே சொல்லலாம்.
இருந்த போதிலும் இந்த பீடமானது இந்த சமூகத்திற்க்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்று சற்று பின்னோக்கி பார்த்தால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றி உள்ளதா என்கின்ற கேள்வி இருந்து வருகிறது.
இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு இஸ்லாமிய அடிப்படையில் தவ்வா அடிப்படையில் எவ்வாறான தீர்வினை நோக்கி செல்லலாம் என்கின்ற தேசிய ரீதியிலான பங்களிப்பை செய்வதில் இருந்து இந்த பீடம் தவறிப்போய் இருக்கிறது. வெறுமனே பட்டதாரிகளை பாஸ் பண்ண வைக்கின்ற ஒரு பீடமாக, இயந்திரமயமாக இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் மேற்சொன்ன ஆய்வரங்கானது பிற்போக்குவாத சடவாத சிந்தனை நிறைந்தவர்களினால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வரங்கு மேற்சொன்ன விடயங்களை இந்த சமூகத்தின் பார்வையில் தீர்த்துவைக்குமா என்றால் அது கேள்விக்குறியாகவே காணப்படும்.
குறிப்பாக உதிரிகளை ஆய்வரங்கின் பொறுப்புதாரிகளாக கொண்டு கொண்டு நாளை நடை பெற உள்ள ஆய்வரங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பல்கலையில் பல திறமையாக செயற்படக்கூடியவர்கள் இருக்கத்தக்கதாக இந்த பொறுப்பு இவர்களிடத்தில் வழங்கப்பட்டிருப்பது மேலும் மேலும் ஒரு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை சமூகம் சாராது ஒரு மூலையில் முடக்கப்படுவதற்கு வாய்ப்பாகவே அமையும்.
இந்த பீடத்தில் உதிரிகள் அல்லது டம்மிகள் சிலருக்கு குறித்த ஆய்வரங்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம்.
அவ்வாறு குறிப்பிட காரணம் தற்காலத்தில் அரசியல் களத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற போது தமது செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரித்துகொள்வதற்காகவும் தமக்கு ஆவண ரீதியான உதவிகளுக்காகவும் தன் சார்பில் சுயேட்சை வேட்பு மனு ஒன்றை பிரதான வேட்பாளர் கொடுத்து விடுவார்கள்.
இந்த சுயேட்சை வேட்பாளர் பிரதான வேட்பாளருக்கு மிகவும் பக்க துணையாக நிற்பார். மட்டுமல்லாது இவரது பணி தேர்தலின் அன்றைய தினத்துக்கு வாக்களிப்பு முகவர்களை போடுதல் வாக்கு என்னும் முகவர்களை போடுதல் போன்ற செயற்ப்பாடுகளில் மும்மூரமாக ஈடுபடுவார். அதற்காக பிரதான வேட்ப்பளரினால் சில ரூபா சலுகைகளை இவர் பெற்றும் இருப்பார்.
பெற்ற ரூபாய்க்காக இவர் விழுந்தடித்துக்கொண்டு பணியாற்றுவார். இப்படித்தான் தேர்தலில் டம்மி வேட்ட்ப்பளர்களின் கதை இருக்கும்.
இதே மாதிரியான ஒரு செயற்பாடுதான் இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரபு இஸ்லாமிய பீடத்தை சேர்ந்த இருவர் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அரபு பீடத்தின் இந்த இருவரும் டம்மிகள் என்பதையும் எதிர்கால உபவேந்தர் பதவிக்கு உண்மைகுண்மையாக போட்டியிடும் வேட்ப்பளர்களுக்கு பக்கத்துணையாக நிற்ப்பவர்கள் என்பதையும் வெகு விரைவில் சமூகம் உணர்ந்துகொள்ளும்.
இவர்கள் இருவரும் இணைந்து எதிர்வரும் உபவேந்தர் தெரிவுக்கான தேர்தலில் குறைந்த பட்சம் ஒரு வாக்கையேனும் பெற்றுக்காட்ட முடியுமா? என்ற சவாலையும் விடுக்கலாம்.
இவர்களது கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்த்தால் இவர்களால் இந்த சமூகம் அடைந்த நன்மை அல்லது குறைந்த பட்சம் இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்றால் பூச்சியமாகவே காணப்படும்.
மாறாக பல்கலைக்கழகத்தின் எந்த ஒரு நன்மைக்கும் எதிர்மாறான கருத்துகளை கொண்டவர்கள். பக்கவாதம் கொண்டு பிட்டிசம் அடிப்பதில் வல்லவர்களாக இவர்களின் செயற்ப்பாடு இருந்து வருகிறது தற்போதும் இருக்கிறது.
எந்த ஒரு செயற்பாட்டுக்கும் தமக்கு கூலி என்ன என்பதை அளந்து விட்டு களத்தில் இருந்ந்து செயற்படும் சுயநல வீரர்கள்தான் இவர்கள்.
இவர்களிடத்தில்முன்மாதிரி காணப்படுமா? சமூக விழுமியம் தொடர்பாக ஏதாவது அறிவு இருக்கிறதா? பண்பாட்டு நாகரீகம் பற்றி இவர்களுக்கு பேச அருகதை இருக்கிறதா? தாங்கள் மௌலவி என்று மற்றவர் அழைப்பதை தரக்குறைவாக நினைக்கும் இவர்களா சர்வதேச ஆய்வரங்கின் பிரதான ஏற்ப்பாட்டாளர்கள்?
இவ்வாறான நிலையில் தான் இலங்கை முஸ்லிம் குழுவை பார்த்து ஒரு அரபு நாட்டின் அறிஞ்சர் கூறிய ஒரு கதை ஜாபகம் வருகிறது.
அதாவது இந்த நாட்டில் நாங்கள் பிறப்பதற்கு எங்களுக்கு இறைவன் சந்தர்பத்தை தரவில்லை முழு இலங்கையும் இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு வாய்ப்பினை இழந்துவிட்டோம் ஆனால் உங்களுக்கு அந்த சந்தர்பத்தை இறைவன் தந்துள்ளான் அதை பயன் படுத்த வேண்டிய பொறுப்புதாரிகளாக நீங்கள் இருக்கிறீர்கள்.
எதன் மூலம் இது சாத்தியமாகும் என்று அந்த அறிஞர் மேலும் கூறுகிறார், அதாவது ஒருவரது நல்ல நடத்தைகள், சகவாழ்வை (coexistence) ஏனய சமூகங்களோடு பேணுதல் மற்றும் சிறந்த முன்மாதிரிகள் மூலம் இது சாத்தியமாகும் என்று சொல்லிய நிகழ்வு இன்றும் நெஞ்சினை உலுக்குகின்ற ஒரு செயல்.
மத விழுமியங்களை ஒரு முஸ்லிம் எவ்வாறு அனுசரிப்பது என்பதை தாம் வாழுகின்ற சமூகத்துக்கு கற்றுக்கொடுப்பதில் இருந்து இந்த பீடத்தின் இவர்கள் கடந்த காலங்களில் விலகி உள்ளனர்.
இவ்வாறான பிற்போக்கான சிந்தனை வாதிகளிடம் சர்வதேசம் போற்றும் ஆய்வரங்கு நடத்துகின்ற பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகின்ற விடயமாகும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு பீடத்தில் சிரேஷ்டமான விரிவுரையாளர்கள் இருக்கிறார்கள் அத்துடன் பக்குவம் நிறைந்த தூர நோக்குடன் சமூகத்தின் இலக்கு நோக்கி செயற்படும் சிந்தனைவாதிகள் இல்லாமல் இல்லை என்பதை அந்த பீடத்தின் புதிய பீடாதிபதிக்கும் உரிய உயரிய அதிகாரிகளுக்கும் சொல்லிவைக்க விரும்புகிறோம்.
-அபூ ரொஷான்-