Breaking
Wed. Nov 20th, 2024

(மூஸா உமர்) 

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று (03) மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இன்று (03) காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் த.வி.கூ , ஸ்ரீ.மு.கா, ஐ.தே.க, ஐ.ம.சு.கூ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர்களாக: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக வீ.தண்டாயுதபானி கல்வி அமைச்சராகவும், துரைராஜசிங்கம், விவசாய அமைச்சராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சி சார்பாக, ஆரியபதி கலபதி வீதி அபிவிருத்தி அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக சந்திரதாச கலபதியும், பிரதித் தவிசாளராக தமிழ் விடுதலைக் கூட்டணி சார்பாக பிரசன்னா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

1654445_1546682185619633_120456723188182292_n-600x450 10957539_1546681812286337_6567234482284401609_n 10401565_1546681915619660_5623872492725063754_n 10989975_1546682092286309_126356454392909567_n

Related Post