அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில்,வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும்,அதற்கு பின்னால் இருந்து செயற்படும் இந்த பொதுபல சேனாவின் செயற்பாட்டினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வண்மையாக கண்டித்துள்ளார்.
இன்று பிற்பகல் பொதுபலசேனா அமைப்பின் 5 மதகுருக்களும்,இன்னும் சில நபர்களுமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் செயற்பட்டதுடன்,சட்ட விரோதமான முறையில் தெடுதல் ஒன்றினை நடத்தியிருப்பது வணடமையான கண்டனததுக்குரியதாகும்.
மேலும் அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் –
அமைச்சுக்குள் எவ்வித முறையான அனுமதியினையும் பெற்றுக் கொள்ளாமல் அமைச்சுக்குள் நுழைந்து பௌத்த மதகுரு ஒருவர் ஒழிந்த திருப்பதாகவும் அவரை தேடுவதாகவும் இந்த மதகுருக்கல் தெரிவித்துள்ளனர்.இதனால் பிரதி அமைச்சர் வசந்த லக்ஷமன் பெரேரா,மற்றும் அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன ஆகியோரி்ன் பணிகளுக்கு இடைஞ்சல் எற்பட்டுள்ளது.
அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.சமூகத்தில் மதிப்பளிக்கக் கூடிய மற்றும் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய நல்ல பண்புகளை கொண்டவர்கள் மதகுருமார்கள்.ஆனால் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
கட்டுக்கடங்காத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் இந்த நாடடின் அரச இயந்திரத்தின் செயற்பாடுகள் கேள்விக்குரியதாகிவிடும்.3 தசாப்த யுத்தம் மற்றும் அழிவுகளை நிறைவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி கூறும் இந்த வேளையில் மீண்டும் நாட்டின் பொருளாதார மற்றும் சமாதான செயற்பாடுகளை பின்னடைவு செய்யும் வகையில் இந்த பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
இறுதியாக இந்த பொதுபலசேனாவுக்கு அழைப்பு விடுக்கின்றேன் தீவிரவாதத்தை கைவிட்டு பௌத்த பிரான் போதித்த போதணைகளை கடைபிடித்து ஒழுக்க சீலர்களை உருவாக்கும் பணியினை மேற்கொள்ள முன்வாருங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.