Breaking
Tue. Dec 24th, 2024

இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கும் பாகிஸ்தான், இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களை எமது அர­சாங்­கத்­துடன் மோத­விடும் சதித்­திட்­டமே போதை வஸ்தை முதன்­மை­ப­டுத்தி எதிர்க்­கட்சி கொண்டு வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யாகும். எனவே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் என கைத்­தொழில் மற்றும் வணி­கத்­துறை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (21-05) இடம்பெற்ற ஐ.தே.கட்சி அர­சுக்­கெ­தி­ராக முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், ஜெனீ­வாவில் எமக்கு எதி­ராக பிரே­ரணை கொண்டு வரப்­பட்ட போது எமக்கு ஆத­ரவு வழங்­கிய நாடுகள் தான் பாகிஸ்தான், இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான்.

இன்று எதிர்க்­கட்சி எமக்கு ஆத­ரவு வழங்­கிய நாடு­களின் பெயர்­களை சபையில் வெளி­யிட்டு போதை­வஸ்­தோடு தொடர்­பு­ப­டுத்தி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் உரை­யாற்­று­கின்­றது.

இது திட்­ட­மி­டப்­பட்ட செய­லாகும். எமக்கு ஆத­ரவு வழங்கும் நாடு­களை அர­சுடன் மோத வைத்து ஆத­ர­வுக்கு பங்கம் விளை­விக்கும் எதிர்க்­கட்­சியின் சதித்­திட்­ட­மாகும். எனவே, இதனை நாம் எதிர்க்­கின்றோம். அன்று விடு­த­லைப்­பு­லி­களால் முஸ்லிம் மக்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டனர்.

முஸ்­லிம்கள் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 20 வரு­டங்­க­ளுக்கும் மேலாகி விட்­டது. ஆதலால் எமது மக்கள் வாழ்ந்த இடங்கள் இன்று காடு மண்டிக் கிடக்­கின்­றன.

அவற்றை சுத்தம் செய்து அம் மக்­களை மீள் குடி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் போது அதனை காடு­களை அழிப்­ப­தாக பொய் பிரச்­சாரம் செய்து பொது­பல சேனா போன்ற அமைப்­பு­களை தூண்டி விட்டு முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்றம் தடுக்­கப்­ப­டு­கி­றது.இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

திவி­நெ­கும திட்­டத்தால் வடக்கின் விவ­சா­யிகள் உட்­பட 10 இலட்­சத்­திற்கும் மேலானோர் நன்­மை­ய­டைந்­தார்கள். உள்ளூர் உற்­பத்­திகள் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் அர­சுக்கு எதி­ராக செயற்­படும் மேற்கு நாடுகளுக்கு துணைபோகும் விதத்தில் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளது.

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதனை எதிர்த்து வாக்களிக்கும் என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். (ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்­னீர்­செல்வம் நன்றி விரகேசரி 21-05-2014)

Related Post