வடக்குக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது இன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து பிரதமர், மீள் குடியேற்றம் தொடர்பிலும், புனருத்தாபனம் பெற்ற இளைஞர்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமரின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளார்.