Breaking
Thu. Jan 16th, 2025

வாழைச்சேனை நிருபா்:மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் இரவு நேரத்தில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டங்களை சேதப்படுத்துவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காவத்தமுனை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் இன்று அதிகாலை 03.00 மணியளவில் உட்புகுந்த இரண்டு யானைகள் அத்தோட்டத்தில் உள்ள முப்பது தென்னங்கன்றுகளையும் வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் அண்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள் இக் கிராமத்திற்கு அண்மையில் உள்ள மூக்கர்ரகல், சூடுபத்தினசேனை, மீயான்குளம் போன்ற காட்டுப்பகுதிகளில் இருந்து யானைகள் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Post