அஸ்ரப் ஏ சமத்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜே.பாயிசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை அனுப்பியுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம். எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனால் மேற்படி பாயிசை விசாரணைசெய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியினால் பிரதியமைச்சர் அமீர் அலி நியமிகக்ப்பட்டிருந்தார்.
ஏற்கனவே ஓழுக்காற்று குழுவின் தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலியினால் 13.03.2015திகதி பாயிசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்ககப்பட்டுள்ளது. இதற்கு அவர் 14 நாட்;களுக்குள் பதில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் அரசியல் பீட உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டு இந்த ஜனாதிபதியின் வெற்றிக்கு உழகை;குமாறு தீர்மானம் எடுத்து செயல்பட்டனர். ஆனால் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் அதற்கு எதிராக செயல்பட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் முதல் முறையாக கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்;டியிட்டது. அதன் உறுப்புரிமையை பெற்ற பாயிஸ் கட்சியின் வளங்கள் , நிதி. பிரச்சாரங்களினாலேயே ஒரு உறுப்புரிமையை கட்சி பெற்றிருந்தது. அந்த கட்சிக்கு சட்ட திட்டங்களுக்கு அப்பால் சென்று செயல்பட்டுள்ளார்.
இக் கட்சியில் போட்டியிட்ட ஏனைய 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களது கிடைக்கப்பட்ட வாக்குகளிள் கூட்டு மொத்தமானதொரு விருப்பு வாக்குகள் அடிப்படையிலேயே பாயிஸ் மட்டும் கொழும்பில் ;உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர் கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்படாமல் எதிராக அவர் செயல்பட்டள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் பிரச்சாரம் செயதுள்ளார். அத்துடன் கட்சிக்கும் தலைமைத்துவத்துககும் எதிரான ஊடக மாநாட்டில் கலந்து கெண்டு கருத்துக்களையும் தெரிவிததுள்ளார்.
2014.12.22 ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக மாட்டில் கலந்து கொண்டிருந்தார்;.
2014.12.24 தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் தமது பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் மேடை அமைத்து பிரச்சாரம் செய்து கொழும்பு மாவட்ட ஆதரவாளர்களை பிழையாக வழிநடத்தியுள்ளார்.