இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வடக்குக்கான விஜயத்தின்போது பலாலியில் வைத்து வலியுறுத்தினார்.
இந்த அடிப்படையில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என்பன நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
ஆசிய பிராந்தியத்தில் 2025ஆம் ஆண்;டளவில் ஏற்படப்போகும் அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
படையினரை வலுப்படுத்தும் அதேநேரம் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியும் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்றும் ரணில் கேட்டுக்கொண்டார்.
எனவே பழையவற்றை பார்க்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அவர் படையினரிடம் கோரிக்கை விடுத்தார்.