இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நோக்கில் தனியாக வானொலி சேவை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மான்செஸ்ட்டர் நகரில் உள்ள ஏஷியன் சவுண்ட் ரேடியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. இங்கிலாந்து ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் இதற்கான லைசென்ஸ் அர்கிவா, பாவெர் மற்றும் யூடிவி மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் (2016) 14 வானொலி நிலையங்களின் மூலம் இந்த வானொலி நிகழ்ச்சிகள் இங்கிலாந்து முழுவதும் ஒலிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சிகளில் ஆசிய நாடுகளின் இசை, இஸ்லாம் சார்ந்த விரிவுரைகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை ஆங்கிலம், உருது, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் வங்காள மொழிகளில் ஒலிபரப்ப நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.