Breaking
Mon. Nov 25th, 2024
-எம்.ஐ.அப்துல் நஸார்-
சுற்றறிக்கை ஒன்றின் மூலம் 2014 ஆம் ஆண்டு மின்சார சபையின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் வேதன அதிகரிப்பை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு  மாதமொன்றிற்கு 50 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக பொலீஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரிடமும் வாக்குமூலங்களைப் பெற வேண்டுமென இலஞ்ச விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகேக்கு அறிவித்துள்ளது.
இவ்விடயம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வருவதனால் மறுதினமே அறிவித்தல் விடுக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பொலீசாருக்கு உத்தரவிட்டார்
மின்சாரப் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயலால் பெரேரா பொலீஸாரிடம் மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே ஹெஜிம் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி ஜெயசுந்தர நேற்றைய தினம் சீ.ஐ.டீ.நிதி மோசடி பிரிவினரால் விசாரணக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இதுதவிர, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நவாட் கப்ராலும் அண்மையில் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post