விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களது மீள் குடியேற்றத்திற்காக சுயநலம் பாராது முழுமையான அர்ப்பணிப்புடன் போரா டுகின்ற ஓர் அருமையான போர் வீரனாக அமைச்சர் ரிசாத் பதியுதீனைத் தான் பார்ப்பதாக ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி பாராளு மன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அன்று புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அநாதரவாக புத்தளத் திற்கு வந்தபோது நான் ஒரு பிரதியமைச்சராக இருந்து அம்மக்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்தேன். இன்று பல வருடங்களாக அம்மக்களுக்காக இந்த இளம் அமைச்சர் பதியுதீன் போராடுகிறார். அம்மக்களை அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த மக்கள் மீள் குடியேற்றலுக்கு எதிராகச் சில அரசியல்வாதிகளும், மதத் தலை வர்களும் குறுக்கே நின்று வருகின்றனர்.
ஆனால் அமைச்சரோ அவற்றையும் மீறி தனது துணிச்சலால் மக்களுக்காக சேவை செய்து வருகிறார். அவரை நான் பாராட்டுகின்றேன்.
இவ்விடயத்தை இந்த உயர் சபையான பாராளுமன்றத்திலே நாக்கூசாமல் சொல்லிக் கொள்ள நான் விரும்புகின்றேன் என்றும் அஸ்வர் எம்.பி.தெரிவித்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வர்த்தக வாணிப அமைச்சினையும் திறம்பட நடத்தி வருகின்றார். அண்மையில் ஜனாதிபதியுடன் இவர் பஹ்ரெயின் சென்று பல வர்த்தக ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார் எனவும் அஸ்வர் எம்.பி.தெரிவித்தார்.