Breaking
Wed. Oct 30th, 2024

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீன்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பால் அவை மேற்கண்ட நோய்களில் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது.

இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மீன் எண்ணெயால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இருந்தும் மீன்எண்ணெய் இரு மடங்கு விற்பனையாகி வருகிறது.

அதில் ஒமோ–3 எஸ் என்ற கொழுப்பு ஆசிட்டுகள் (பேட்டி ஆசிட்ஸ்) உள்ளது. அது இதயம் மற்றும் ரத்த குழாய்கள் வலுவடைய துணை புரிகிறது என்ற கருத்து நிலவுகிறது.

Related Post