Breaking
Wed. Oct 30th, 2024

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (01) மாலை அல்லது இரவு வேளையில் இடி , மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருகோணமலை பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

கிழக்கு  கரையோரமாக மணிக்கு 20 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும்  வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

Related Post