ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி சிறுவர்கள் விளையாடும் போது போடும் கூச்சல் சத்தம் , ஒலி மாசாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் 45 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கை இது வரை அமுலில் இருந்த்து. இதனால் பாலர் பள்ளிகளில் சத்தக் கட்டுப்பாடு சாதனங்கள் நிறுவப்பட்டன. வெளியிடங்களில் சிறுவர்கள் விளையாடுவது கூட சில நேரங்களில் தடை செய்யப்பட்டது.
புதிய விதிமுறையின் காரணமாக டோக்யோவில் சிறார் நல நிலையங்கள் பல புதிதாகக் கட்ட அனுமதிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியாக அதிகப்படியான பெண்கள் வேலையில் ஈடுபடத் தேவை இருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.