Breaking
Tue. Dec 24th, 2024

வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக்காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காணவேண்டுமென்பதற்காகவே இங்கு நான் விஜயம் செய்தேன்.

 மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோண் நேற்று முசலிப் பிரதேசத்தில் விஜயம்செய்து அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சருடன் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார்.

இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் மேன்மையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்கவும்  ஓர் அமைச்சராகவும் தலைவராகவும்  றிசாத் பதியுத்தீன் செயற்பட்டு வருகின்றார்.

உங்களுக்கு காணிபெற்றுத் தந்த காரணங்களுக்காக மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் அமைச்சராகவும் அவரே காணப்படுகின்றார். காடுகளை அழித்து முஸ்லீம்களை குடியேற்றுகின்றார். என்று அமைச்சர் றிசாத் மீது இன்று பௌத்த பேரினவாத அமைப்பொன்று நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரச்சாரம் செய்கின்றது.

அத்துடன் அவரை மேல்நீதிமன்றத்திலும் அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்தவொரு குற்றமும் செய்யாத சூழ்நிலையில்  இன்று நீதிமன்றத்தில் கைகட்டி நிற்கின்றார்.  உங்களுக்கு காணி பெற்றுத் தந்தற்காகவே அவரை இவ்வாறு குற்றவாளியாக அந்தப் பேரினவாத அமைப்பு முயற்சிக்கின்றது.

உங்களுக்காக தைரியமாகப் பேச அமைச்சர் றிசாத் பதியுத்தீனுடன் ஒற்றுமைப்படுவதன் முலமே இவ்வாறான பேரினவாத அமைப்பை அடக்க முடியும்.உங்கள் மண்னில் வாழும் அடிப்படை உரிமைகளை மறுக்கப்பட்ட உங்களது அபிவிருத்தி பற்றியும்  மிக ஆக்ரோசமாக அவர் பேசுவதாலும் பணி செய்வதாழும் உங்களது அமைச்சரை ஓர் இனவாதியாக மதவாதியாக சித்தரிப்பதன் முலம் உங்கள் மீள்குடியேற்றத் தடுக்கம் சதியை இந்த பௌத்த இனவாதிகளோடும் தமிழ் இனவாதிகளும் சோந்து செய்து வருகின்றார்கள்.

 புலிகள் எவ்வாறு உங்களை வெளியேற்றினார்களோ அதைவிட  மோசமாணதாக இவர்கள்  செயற்படுகின்றார்கள். இன்று நான் இங்கு வந்தபோது  அவதாணித்த விடயம் நீங்கள் உங்கள் காணிகளில் தான் குடியேறியிருக்கின்றீர்கள் என்பது உண்மை. 20 வருடங்கள் நீங்கள் இல்லாத இந்தக் காணி இன்று காடாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட காட்டை துப்பரவு செய்யாமல் நீங்கள்  மட்டுமன்றி எவராவது வாழமுடியுமா? என்ற யதார்த்தமான கேள்வியை இந்த இனவாதிகளிடம் கேட்கவிரும்புகின்றேன்.

உங்களின் மீள்குடியேறற்த்திற்காக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் ஜனாதிபதிக்கு முன்பாக தைரியமாக  உரத்துப் பேசுவதையும் நான் கண்டுள்ளேன். அத்துடன் நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமுகத்திற்கு அநீதி இழைக்கப்பட்ட ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியிடத்திலும்  அமைச்சரவையிலும் அநீதிக்குஎதிராக தைரியாமாகவும் அச்சமின்றி பேசியதை நான் கண்டுள்ளேன்.

 எனவே அதிக அபிவிருத்திகளை எதிர்ப்பார்த்துள்ளதொரு  சமுகமாக இருக்கின்ற நீங்கள் பிரிந்து விடாமல் ஒன்றுபட்டு இருங்கள். தேர்தல் காலங்களில் மட்டும் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளைப் போல அல்ல அமைச்சர் றிசாத் பதியுத்தீன் எந்தக் கட்டத்திலும் உங்களைப் பற்றி சிந்திப்பவர்தான் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் என அமைச்சர் குணரத்தின வீரக்கோன் உரையாற்றினார்.

Related Post